Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவிற்கு பறந்தார் பசில் ராஜபக்ச

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று (11) அதிகாலை 2.55மணிக்கு  அமெரிக்கா  சென்றுள்ளார்.

சமூர்தி அபிவிருத்தித் திட்டம், திவிநெகும அபிவிருத்தி திட்டம் போன்ற பாரிய திட்டங்கள் தொடர்பில் பெருமளவிலான நிதி பசில் ராஜபக்சவினால் ஒதுக்கப்பட்டதுடன் திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் என்ற ஒன்றும் பசில் ராஜபக்சவால் வேறாக நிறுவப்பட்டது. 

இவ்வாறு பாரிய நிதி தேவைப்படும் திட்டங்களை அறிமுகப்படுத்திய பசில் அந்நிதிகளை அரசியலிலும் ஜனாதிபதித் தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தியதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

இவ்வாறு செல்வாக்குடன் இருந்த பசில் ராஜபக்ச இன்று அதிகாலை தனது மனைவி  புஷ்பா ராஜபக்சவுடன் கட்டுநாயக்கவி்ல் இருந்து லொஸ் அன்ஜெலிஸ் நோக்கி  EK349 B777 என்ற விமானத்தில் புறப்பட்டுள்ளார். 

அமெரிக்க பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள பசிலுக்கு கலிபோர்னியாவில் அவரது மனைவி புஷ்பா  ராஜபக்சவின் பெயரில் 4 வீடுகள் உள்ளன.


அவற்றின் முகவரிகள் பின்வருமாறு

1) 5581 Homecoming, Mira Loma, CA 91752
(2) 15067 Preston Dr, Fontana, CA 92336
(3) 222 Dexter St, Covina, CA 91723
(4) 15067 Preston Dr, Fontana, CA 92336





Post a Comment

0 Comments