முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
அதற்காக தற்போது தேசியப்பட்டியலில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரை நீக்கி அவ்விடத்தை மஹிந்த ராஜபக்சவால் நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“முன்னாள் ஜனாதிபதி அரசியலில் இருந்து ஓய்வுபெறவி்ல்லை. இந்நாட்டுக்கு மாபெரும் சேவை ஆற்றிய தலைவரொருவர் வீட்டுற்குள் அடங்கி இருக்கமாட்டார். அவ்வாறு இருக்க விடவோம். யாராவது அவரை வீட்டிற்குள்ளேயே முடக்க முயற்சி செய்தால் அதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம்” எனநேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்துத் தெரிவித்திருந்தார்.

.jpg)
0 Comments