கிழக்கு மாகாணத்திலுள்ள உலமாக்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பமானது.
சவூதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கங்களுக்கான அமைச்சின் உதவியுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியினால் நடாத்தப்படும் இந்த செயலமர்வு நாளை மாலையுடன் நிறைவுபெறவுள்ளது.
இதில் சவூதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கங்கள் வக்பு அழைப்பு வழிகாட்டல்களுக்கு அமைச்சின் இந்திய உப கண்டத்திற்கான பொறுப்பதிகாரி அகமட் பின் அலி சுலைமான், சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்திற்கான அழைப்பு வழிகாட்டல்களுக்கு பொறுப்பான அதிகாரி அகமட் பின் முகம்மட் அல் சயீட் அப்துல் காதிர், சவூதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கங்கள் வக்பு அழைப்பு வழிகாட்டல்களுக்கான அமைச்சின் ஆலோசகர் அஸ்ஸெய்ஹ் ஹாலித் இப்னு ஈஸா மற்றும் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுனங்களின் சம்மேளன தலைவர் எம்.ஐ.சுபைர், சம்மேளன பிரதி தலைவர் சட்டத்திரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பதில் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனீ, தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபுத்துறை பிடாதிபதி மௌலவி ஏ.எம்.அலியார் றியாதி, சிறிலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளர் அஸஸெய்ஹ் ஏ.ல்.மும்தாஸ் மதனீ உட்பட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
குறித்த செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களைச் சேரந்த சுமார் 500 உலமாக்களும், பள்ளிவாசல்களின் கதீப்மார்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments