Ticker

6/recent/ticker-posts

அரபு நாடுகளுக்கு அளுத்கம சம்பவம் தொடா்பாக பொய்யை சொல்லியிருக்கிறாா்கள் – ஹூசைன் முஹம்மத்

வூதிஅரேபியாவுக்கான  தூதுவர் ஹூசைன் முஹம்மத்  கொழும்பு மாநகரப் பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான தோ்தல்  பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறாா்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அரபு நாடுகளின் தலைவர்களது நல்ல நண்பன்.
அதனால் தான் கிண்ணியா பாலம் மற்றும் பாதை அபிவிருத்திகளுக்கு சவூதிஅரேபியா நிதி வழங்கியிருந்தது. மஹிந்த ராஜபக்ச பற்றியும் அளுத்கம சம்பவம் பற்றியும் இந்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் பிழையான தகவல்களை அரபு நாடுகளிடம் சொல்லியிருக்கின்றாா்கள் என்று  ஹுஸைன் முஹம்மத் கூறியுள்ளாா்.
அண்மையில் ஜக்கிய நாடுகள் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதியை OIC தலைவர் சந்தித்து போது, ஜனாதிபதி அவர்கள் இலங்கை முஸ்லிம் மக்கள் எனது நண்பர்கள், அவர்களைப் பாதுகாப்பது எனது கடமை எனச் சொல்லியிருந்தார். முஸ்லீம்கள் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ்கின்றனர்.
கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் கூடுதலானோர் மத்திய கிழக்கில் தொழில் செய்கின்றனர். அவர்களது குடும்பம் மற்றும் தாய் பிள்ளைகள் இலங்கையில் நிம்மதியாக வாழ்வதற்கும் எவ்வித பயமுமின்றி தனியே அவர்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வதற்கும் வழிவகுத்துக் கொடுத்தவர் ஜனாதிபதி. ஆகவே முஸ்லீம்கள் இந்த ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார். முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் மகனான இவர், ஜ.தே.கட்சி சார்பில் கொழும்பு மாநகர மேயராகவும் கடமையாற்றியவர்.

Post a Comment

0 Comments