Ticker

6/recent/ticker-posts

வவுனியாவில் தீயில் கருகி மனைவி பலி! கணவன் வைத்தியசாலையில்

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளதுடன், கணவன் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற தீ விபத்தில் கணவன்- மனைவி இருவரும் எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்கைக்குப் பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.
உக்கிளாங்குளத்தைச் சேர்ந்த கஜேந்திரன் சுதாஜினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரின் கணவரான பாலச்சந்திரன் கஜேந்திரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Post a Comment

0 Comments