தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக எம்.எம். சுஹைர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து, இதற்கான நியமனக் கடிதத்தை எம்.எம். சுஹைர் நேற்று பிற்பகல் பெற்றுக்கொண்டார்.
1994 ஆம் ஆண்டில் அரசியலில் பிரதேவசித்த சுஹைர், 2000 ஆம் ஆண்டு வரை தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக எம்.எம். சுஹைர் செயற்பட்டிருந்தார்.
2006 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை ஈரான் நாட்டிற்கான இலங்கையின் தூதுவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

0 Comments