முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து பிரிப்பதற்கு எவராலும் முடியாது. அவ்வாறு பிரிப்பதற்கு சிலர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே தோல்விகளையே கண்டுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்தன. இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதும் இந்த முயற்சிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. எனினும் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க எவராலும் எந்த காலகட்டத்திலும் முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அண்மையில் ‘தாமரைத் தடாகம்’ அரங்கில் நடைபெற்ற முஸ்லிம் மக்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 Comments