Ticker

6/recent/ticker-posts

இந்தப் பக்கம் ஐந்து அமைச்சர்கள் வருவார்கள் – ராஜித ; எங்கள் பக்கம் பலர் வருவார்கள் – கெஹலிய


எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் ஐந்து அமைச்சர்களும் மேலும் பல பாராளுமன்ற, பிரதேச சபை உறுப்பினர்களும் எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் அமைச்சரும் எதிரணி பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தகவல் தெரிவித்துள்ள அதேவேளை தமது பக்கம் பலர் வந்து இணையவுள்ளதாகவ அரச பேச்சாளர் கெஹலிய
ரம்புக்வல்ல தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக பெருமளவான அரசியல் பிரமுகர்கள் எதிரணியில் இணைந்து வரும் நிலையில் நேற்றைய தினம் ஒரு மாகாண சபை உறுப்பினர் உட்பட மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கி ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் தற்போது அரசிலிருந்து விலகிச் சென்ற பெருமளவான அரசியல்வாதிகளின் வெற்றிடத்தைக் கைப்பற்ற அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் பல சிறிய கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments