Ticker

6/recent/ticker-posts

கென்டக்கி விமான விபத்தில் நால்வர் பலி: ஏழு வயது சிறுமி உயிர் தப்பினார்

ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் ஏழு வயது சிறுமியொருவர் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளார்.

குறித்த விமானம், மரங்கள் அடர்ந்த பகுதியில் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளையிலேயே விபத்துக்குள்ளாகி உள்ளது என கென்டக்கி மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தடைந்த விமானத்திலிருந்து உயிர்த்தப்பிய சிறுமி, குறித்த பகுதியிலுள்ள வீடொன்று சென்று தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து குறித்த சிறுமி மீட்பு பணியாளர்களினால் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் விமானி உட்பட நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் சடலங்கள் இன்னும் அடையாளங் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments