ஒருதொகை வௌிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக தாய்லாந்துக்கு கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
34,600 அமெரிக்க டொலர்கள் இவர் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
இவற்றின் உள்நாட்டுப் பெறுமதி 46 இலட்சம் எனத் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை தாய்லாந்து விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணிக்க முற்பட்ட கம்பஹா - வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
மேலும் சந்தேகநபருக்கு அபாரதம் விதிக்கப்பட்டதோடு, குறித்த நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாவும் லேஸ்லி காமினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments