முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
“ அவர்களுக்கு ஈழத்தில் இருந்து மேலதிக வாக்குகள் கிடைத்தன. நாம் நாட்டை ஒன்று படுத்தியதனால்தான் அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியுமாயிருந்தது. இல்லாவிட்டால் இந்தப் பகுதியில் இருந்து மாத்திரம் தான் வாக்குகள் கிடைத்திருக்கும். அவ்வாறு இருந்திருந்தால் நானேதான் எப்பொழுதும் ஜனாதிபதி. எப்படியோ தற்போது இவர்கள் ஜனாதிபதியாக ஆகியுள்ளனர். நாம் இப்பொழுது எதிர்க்கட்சியி்ல் உள்ளோம். வரலாற்றில் முதன் முறையாக அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் எதிர்க்கட்சிக்கு செல்கின்றனர். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்களுக்கு பிரதமர் பதவி கிடைத்துள்ளது. இதுதான் புதிய மாற்றம். என்னவென்று பார்த்தீர்களோயானால், குறைந்த வாக்குகள் உள்ளவருக்கு பிரதமர் பதவி கிடைப்பதும் , அதிக உறுப்பினர்கள் உள்ள குழுவினருக்கு எதிர்க்கட்சிப் பதவி கிடைப்பதும். அது தான் இவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே கொண்டுவந்த மாற்றம். ஆகவே என்னோடு இருக்கும் உங்களுக்கு நன்றி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நான் உள்ளேன். நான் வெளிநாட்டிற்கு மக்களை விட்டு ஓடிச்செல்ல மாட்டேன். இதற்கு முன்னரும் நாம் கடந்த காலங்களில் படுதோல்வியடைந்துள்ளோம். ”
மஹிந்த ராஜபக்ச உரையாற்றும் பொழுது இடையே ஒருவர், “ அவர்களைக் கொலைசெய்து விட்டாவது ஆட்சிக்கு வந்திருக்கலாமே. அவ்வாறாவது மறுபடியும் பதவிக்கு வருவீர்கள் என்றுதான் நாம் எதிர்பார்த்தோம்” என வினவியதற்கு பதிலளித்த மஹிந்த, “நாட்டில் ஜனநாயம் இருக்கவேண்டும்” என்றார்
0 Comments