கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்
இதனைத் தெரிவித்துள்ளார்.சமூக மாற்றமொன்று தேவை என முழுச் சமூகமே கோரும் தருணத்தில் நாம் இந்த மாற்றத்துடன் இணைந்து கொண்டுள்ளோம்.
சமூகத்திற்கு வலிக்கும் போது கலைஞர்களுக்கும் வலிக்கும். தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றாவிட்டாலும் நாமும் சமூகத்திற்கு சேவையாற்றியுள்ளோம்.
1994ம் ஆண்டுக்கு முன்னதாக கலைஞர்களாகிய நாம் உதை வாங்கினோம். அதன் பின்னரான அரசாங்கமும் எம்மை தாக்கியது.இளைஞர்கள் மாற்றமொன்றை எதிர்பார்ப்பது நாட்டுக்கு துரோகம் இழைப்பதற்காக அல்ல.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் தரப்பினர் மீது சேறு பூசுவது சரியானதல்ல.நாட்டில் வாதப் பிரதிவாதங்கள் இருக்க வேண்டியது அவசியமானது.வீதிகள் பாதைகள் கட்டடங்கள் அமைப்பதில் எவ்வித பிழையும் கிடையாது.எனினும், இந்த பாதைகளில் குற்றவாளிகள் நடக்கின்றார்கள் என்றால் அது பிழை.
சீரிய ஒழுக்கத்துடன் கூடிய சமூகமொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம்.
போர் வெற்றியானது அனைத்து பிழைகளையும் மூடி மறைப்பதற்கான ஓர் அனுமதிப்பத்திரம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments