தமிழ், முஸ்லிம் கட்சிகளில் சிலவும் அக்கட்சிகளின் சில தலைவர்களும் மட்டுமே பொது
எதிரணி வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்க முடிவெத்துள்ளனரே தவிர முழு நாட்டிமுள்ள
தமிழ், முஸ்லிம் மக்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருமே முழு மனதுடன் எனக்கு
ஆதரவளிக்கத் தீர்மானித்துவிட்டனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதனால்
தனது வெற்றியில் தனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார். ஜனாதிபதி அரச செய்திப் பத்திாிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
2005, 2010 தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு
கட்சிகளினதும் ஆதரவின் றியே நான் பெரு வெற்றி பெற்றேன்.
இவ்விரு கட்சிகளுமே அன்றும் எனக்கு எதிராகவே பிரசாரம் செய்தன. அதனால் தேர்தலில்
வெற்றிபெற அக்கட்சியின் ஆத ரவு இருந்தால்தான் வெற்றி பெறலாம், இக் கட்சியின் ஆதரவு
கட்டாயம் தேவை என்ப தெல்லாம் பொய். ஒருவிதமான மாயை. அது இயலாதவர்கள் கதைக்கும் கதை.
என்னைப் பொறுத்தவரையில் நான் மக் களையே நம்புகின்றேனே தவிரவும் கட்சி களையும் அதன்
தலைவர்களையும் அல்ல. முழு நாட்டு மக்களும் என்னுடன் இருப்பதால் எனது வெற்றியில்
எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஜனாதிபதித் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ் கூறியா பெருவாரியான முஸ்லிம்
மக்கள் எனக்கு வாக்களித்தார்கள். அக்கட்சி முதல் தேர்தலில் ரணிலையும், பின்னர் சரத்
பென்சேகாவையும் ஆதரித்த போதும் பெருமளவிலான முஸ்லிம் மக்கள் எனக்கே வாக்களித்தனர்.
அதன் பின்னரே அக்கட்சி என்னுடன் வந்து இணைந்து கொண்டதே தவிர எனது வெற் றியில்
பங்கெடுத்து அல்ல, இம்முறை எனக்கு வாக்களிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களது வீதம்
முன்னரை விடவும் கூடுதலாகவே இருக் கும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

0 Comments