இன்று மாலை (11) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் மத்திய சபைக் கூட்டம் நடைபெற்ற வேளை சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று வேறாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நிகழ்த்தியிருக்கின்றது. அக்குழுவில் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம, ஜனகபண்டார தென்னகோன், அதாவுத செனவிரத்ன மறறும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி தயாசேகர ஆகியோர் உள்ளடங்குவர். கட்சியாப்பின் படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவி ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேனவிற்கே வழங்கப்படவேண்டும் என்பதே இக்குழுவினரின் கோரிக்கையாகும்.



0 Comments