Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது: ராஜித

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சியிலிருந்து பெருமளவு உறுப்பினர்கள் வெளியேறிய பின் சந்தித்த ஒவ்வொரு தேர்தலிலும் ஆளுங்கட்சி தோற்றுப்போனதே வரலாறு. அந்த வகையில் இதுவரை வரலாறு காணாத அளவு உறுப்பினர்களை இழந்துள்ள இந்த அரசாங்கமும் தோற்பதை யாராலும்
தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இது குறித்து மேலதிக தகவல் வெளியிட்ட அவர் 1956ம் ஆண்டு பண்டாரநாயக்கவின் ஆட்சியிலிருந்து ஐந்து பேர் வெளியேறி ஆட்சியை மாற்றினார்கள், 1964இலும் 14 பேர் வெளியாகி சுதந்திர கட்சியை ஆட்சியிலிருந்து நீக்கினார்கள். 2001இலும் நாங்கள் 14 பேர் வெளியேறி சந்திரிக்காவின் ஆட்சியும் கவிழ்ந்தது. இன்று இந்த அரசாங்கத்திலிருந்து இதுவரை 25 பேர் வெளியேறியிருக்கிறார்கள் எனவே இந்த ஆட்சி கவிழ்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments