முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகளுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒத்திவைக்கப்பட்டது.
மெனிக் பாமில் வசித்து வந்த இரு அகதிகள் தாக்கல் செய்த மனுவை கருத்திற் கொண்டு புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்றில் தேர்தலை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், முன்னைய அரசின் அமைச்சரவையின் அமைச்சர் ஒருவரின் தலையீட்டினாலேயே இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருவதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments