இந்தியப் பெருங்கடலில் 239 பேருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் எம்.ஹெச்.370 விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடரும் என மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூல் சமூக வலைதளத்தில் எழுதியுள்ள அவர், எம்.ஹெச்.370 விமானத்திலிருந்தவர்களின் உறவினர்களுடைய மன உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறதாக தெரிவத்துள்ளார். அந்த விமானத்தைத் தேடும் பணி தொடரும் என்று கூறிய நஜீப் ரசாக், மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் அந்த விமானத்தைக் கண்டுபிடித்தே தீருவது என உறுதி பூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சென்ற மலேசிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் நடுவானில் மாயமானது. சர்வதேச நாடுகளின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகும், அந்த விமானம் குறித்து கண்டறிய முடியவில்லை.

0 Comments