Ticker

6/recent/ticker-posts

மஹிந்த ராஜ்யம் அஸ்தமித்துவிட்டது: மைத்ரிபால

ஹிந்த ராஜபக்ஷ ராஜ்யம் அஸ்தமித்து விட்டது. அதனால் தான் இன்று பல்வேறு பொய்யும் புரட்டும் ஏமாற்று அறிக்கைகளும் விடுத்து மக்களைக் குழப்பும் நிலைக்கு மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன.

ஜனநாயக ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலையில் வாக்குப்பெட்டிகளை மாற்றுவது, கணனி மூலம் தேர்தல் பெறுபேறுகளை மாற்றுவது, புதிய வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கப்படுகிறது போன்ற பல்வேறு மக்களைக் குழப்பி நம்பிக்கையை சிதைக்கும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதானது இவ்வரசாங்கத்தின் பலவீனத்தையும் அதேவேளை மஹிந்த ராஜ்யத்தின் அஸ்தனமத்தையுமே எடுத்துக்காட்டுவதாக புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments