கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம் வாக்காள அட்டையையும் தேர்தல் முடியும் வரை தேசிய அடையாள அட்டையையும் பணங்கொடுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் விசேட குழுவொன்று இயங்கி வருவதாக பொதுமக்கள் தம்மிடம் முறைப்பாடு
செய்துவருவதாக எதிரணி தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
ரூ.5000க்கு இவ்வாறான பேரம் இடம்பெறுவதாகவும் பின்தங்கிய கிராமப்புறங்களில் இயங்கும் இக்குழு முஸ்லிம் கிராமங்களையும் குறி வைத்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கும் எதிரணியினர் தாம் இது குறித்து தமது சமூக விழிப்புணர்வு பிரச்சாரகர்களைக் கொண்டு எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆங்காங்கே வன்முறைகள் வெடித்து வருவதோடு எதிரும் புதிருமான பல சம்பவங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments