போலி வாக்காளர் அட்டைகள் இரண்டை தன்னகத்தே வைத்திருந்த இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நவகத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் கைதாகியுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த வாக்காளர் அட்டைகள் அவர்கள் வசம் எவ்வாறு வந்தது என தகவல் வௌியாகவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments