Ticker

6/recent/ticker-posts

சுதந்திரக் கட்சியின் மீது தன்பார்வையை திருப்பும் சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க திட்டம் வகுத்துள்ளதாக “ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியை காப்பதற்கான இயக்கம்” தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீங்கி பொது வேட்பாளராக போட்டியிட முன்வந்த பின்னர், கட்சி யாப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்சவால் அனுர பிரியதர்ஷனயாப்பா செயலாளராக நியமிக்ப்பட்டதாக இந்த இயக்கம் தெரிவித்தள்ளது. ஆனாலும் மைத்ரீபால சிரிசேன  ஜனதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக அத்தருணத்தில் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயலவில்லை.  தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டபூர்வமான உரிமைக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் புதிய ஜனாதிபதி மைத்ரீ பால சிரிசேன ஆகியோர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அவ்வியக்கம் தெரிவித்துள்து. 






Post a Comment

0 Comments