யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் அரச ஆதரவு தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சிக்கு யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அறிய வருகிறது. வாக்களிப்பிற்கான நேரம் மாலை 4 மணியுடன் முடிவுற்ற நிலையினில் அது 6 மணிவரை
நீடிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக இத்தொலைகாட்சி தவறான செய்திகளை ஒளிபரப்பிய வண்ணமிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் வாக்காளர்களை குழப்பமடைய செய்ததுடன் வாக்காளா்கள் குறித்த காலப்பகுதியினுள் வாக்குசாவடிகளிற்கு செல்வதை தடுப்பதே நோக்கமென நம்ப்பபடுகின்றது.
இந்நிலையினில் குறித்த புகார் அடிப்படையினில் உதவி தேர்தல் ஆணையாளர் ஒளிபரப்பினை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலிலும் இதே பாணி பிரச்சாரங்களையே இத்தொலைக்காட்சி முன்னெடுத்திருந்ததாக அறிய வருகிறது.

0 Comments