இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 8 தொடக்கம் 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறைந்த கட்டணமாக 9 ரூபாவாக காணப்பட்ட பஸ் கட்டணம் 8 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
13 ரூபாவாக காணப்பட்ட பஸ் கட்டணம் 12 ரூபாவாகவும் , 17 ரூபா தொடக்கம் 34 ரூபா வரை காணப்பட்ட கட்டணம் 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
37 ரூபா தொடக்கம் 41 ரூபா வரையான பஸ் கட்டணம் 3 ரூபாவாலும் , 44 தொடக்கம்59 ரூபா வரை காணப்பட்ட பஸ் கட்டணம் 4 ரூபாவிலும் குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.
62 ரூபா தொடக்கம் 64 ரூபா வரை காணப்பட்ட பஸ் கட்டணம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
67 ரூபா தொடக்கம் 80 ரூபா வரையான பஸ் கட்டணம் 6 ரூபாவினாலும், 83 ரூபா தொடக்கம் 85 ரூபா வரையான கட்டணம் 07 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 88 ரூபா தொடக்கம் 99 ரூபா வரையான கட்டணம் 08 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.
அதிகபடியான பஸ் கட்டணமான 708 ரூபா கட்டணம் 57 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 305 அலகுகள் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகஉள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments