படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரப்பானியின் மகன் சலாஹுதீன் ரப்பானி ஆப்கானிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்
ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம், வெளியுறவு அமைச்சரையும் உள்துறை அமைச்சரையும் அதிகாரபூர்வமாக நியமித்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபர் புர்ஹானுதீன் ரப்பானியின் மகனும் சமாதான கவுன்சிலின் முன்னாள் தலைவருமான சலாஹுதீன் ரப்பானி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள 8 அமைச்சர்களில் இவரும் ஒருவர்.
கடந்த வாரம், பரிந்துரைசெய்யப்பட்டிருந்த 10 பேரின் பெயர்கள் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு கடும்போட்டியுடன் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் உருவான புதிய தேசிய ஒற்றுமை அரசாங்கம், அமைச்சரவை விருப்புகள் தொடர்பில் இணக்கப்பாடு காண்பதற்கு திணறிவருகின்றது.

0 Comments