கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தலைநகர் பகோடாவில் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
30 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் ஒரு சில கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு கொலம்பியாவின் சாண்டேன்டர் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகல், கொலம்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Comments