நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக, ஏப்ரல் 8ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, மன்மோகன்சிங்கிற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், அரசு கருவூலத்திற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நிலக்கரி துறை, மன்மோகன்சிங் வசம் இருந்தபோது, இந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இவ்வழக்கு விசாரணை, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கினை இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வரும் ஏப்ரல் 8ம் தேதி மன்மோகன்சிங் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் பிர்லா குமாரமங்கலம், முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி பரேக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

0 Comments