Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் 26 தூதரகங்களின் பணிகளில் நெருக்கடி!

ஏராளமான நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தூதுவர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது இலங்கை இராஜதந்திர சேவையில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னைய அரசாங்கத்தில் அரசியல் நியமனம் பெற்ற தூதுவர்கள் இலங்கைக்குத் திரும்பி அழைக்கப்பட்டனர். இதற்கமைய அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, ரஷ்யா, வியட்நாம், மியன்மார், பங்களாதேஷ், சீசேல்ஷ், உகண்டா, தென் ஆபிரிக்கா, போலந்து, பிரேசில், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள 23 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் கொன்சோல் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு இதுவரை பொருத்தமானவர்கள் நியமிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இலங்கையின் இராஜதந்திர சேவையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
உயர் பதவி தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த நாட்டுக்கு தெரிவு செய்யப்பட்ட தூதுவர் பற்றிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவல்களை பரிசீலனை செய்யும் குறித்த நாடு, அதிகாரியை ஏற்றுக்கொண்டதன் பின்னரே அவர் தூதுவராக கடமையாற்ற முடியும்.
இந்த செயன்முறைகளுக்கு குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இந்தத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையும் எனவும், இதனால் முக்கிய நாடுகளுக்கான இராஜதந்திர சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடுமெனவும் இராஜதந்திர சேவை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments