Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்

19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை உடன் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு இதனை தெரிவித்தார்.
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தமது கருத்தை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் மற்றவர்கள் கூறும் கதைகளை ஏற்க முடியாது.

நாட்டின் தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் அவர் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டியது கடமையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments