முடியுமென்றால் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றியீட்டிக் காட்டுமாறு சம்பிக்க ரணவக்கவிற்கு ää மரிக்கார் சவால் விடுத்துள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்ட முடியாத தரப்பினர் அரசியல் சாசன சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக அண்மையில் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
தேர்தலில் வெற்றியீட்ட முடியாத தரப்பினர் அரசியல் சாசன சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக அண்மையில் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அப்போதைய அரசாங்கம் முயற்சித்த போதிலும் அதனை எதிர்த்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட சர்வாதிகார 18ம் திருத்தச் சட்டத்திற்கு சம்பிக்க ஆதரவளித்திருந்தார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 Comments