Ticker

6/recent/ticker-posts

இந்திய பிரதமர் மோடிக்கு பிரான்ஸில் வரவேற்பு

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாரீசில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய முறைப்படி அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரெண்ட் ஃபேபியஸும் பிரதமர் மோடியுடன் இருந்தார். பிரதமருடன் சென்றுள்ள இந்தியக் குழுவினரை, அமைச்சர் ஃபேபியசுக்கு பிரதமர் மோடி அப்போது அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பிரான்ஸ் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி அப்போது விவாதித்ததமாக வெளியுறவுத்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments