அமெரிக்க கென்சர் ஆராய்ச்சிக் கழகம் (AACR) நடத்திய ஒரு ஆய்வில், சோயா பொருட்கள் பெண்களில் ஏற்படும் மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
சோயாவில் அதிக அளவிலான என்டி ஆக்ஸிடண்டுகளைக் antioxidant கொண்ட ஐஸோப்ளேவோன்கள் உள்ளன. என்டி ஆக்ஸிடெண்டுகள், உடலின் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுத்தும் அல்லது சேதம் விளைவிக்கும் ஆகிஸிஜனேற்றக் காரணிகளை அகற்றியும் நம் உடலைக் காக்கும்.
நமது உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை எதிர்க்கும் செயல் மிக முக்கியமானது. ஏனெனில் ஆக்ஸிஜனேற்ற வினையானது நமது உடம்பிற்கு அவசியமல்லாத கட்டற்ற மூலக்கூறுகளை உண்டு பண்ணும்.என்டி ஆகிஸிடண்டுகள் இவற்றைத் தடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும்.
அமெரிக்க ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வு, ஐஸோஃப்ளேவன்கள் அதிகம் எடுத்துக்கொண்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து 30% வரை குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் மெனோபாஸ் நிலை வரையிலான வயதில் உள்ள மார்பகப் புற்றுநோய் உள்ள மற்றும் மார்பகப் புற்றுநோய் அல்லாத 1294 பெண்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற 75% பெண்கள் சோயா பொருட்கள் உண்பதில்லை என்று தெரிவித்தாலும், அது நமது அடிப்படை உணவுப் பொருட்களான சமையல் எண்ணெய், தானியம் மற்றும் உருளைக்கிழங்கில் அதிகம் காணப்படுகிறது.
என்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் ஈ (கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்) அல்லது அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் சி) மற்றும் உணவுப்பொருட்கள் மற்றும் பானங்கள் வடிவில் இருக்கலாம். மேலும் எளிமையான மூலிகைகளான ரோஸ்மேரி, இலவங்கம், பட்டை, மார்ஜோரம், மஞ்சள் மற்றும் சோம்பு ஆகியவற்றிலும், கடல்பாசி மற்றும் கீரைகளிலும் காணப்படுகிறது.
எனவே நீங்கள் சோயா பொருட்களை முழுமையாக உணவில் சேர்க்காவிட்டாலும், மசாலா பொருட்களையும் கடல்பாசியையும் சேர்த்துக்கொள்வது, புற்றுநோயைத் தடுக்க உதவும்.
0 Comments