Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கன் விமான சேவையை துபாய் மஷ்ரிக் வங்கியில் அடகு வைத்த அதன் முன்னாள் தலைவா் !

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை  துபாய் மஷ்ரிக் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் துபாய் மஷ்ரிக் வங்கியில் 23079 மில்லியன் ரூபா பிணைக் கடன் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
திறைசேரி பிணையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கடனானது அடகுக் கடனுக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது.

2014ம் ஆண்டு நிறைவில் செலுத்தப்படாத கடன் தொகை 30712 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் செயற்பாட்டு நட்டம் 8400 மில்லியன் ரூபாவாகும். ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments