Ticker

6/recent/ticker-posts

சரத்பொன்சேகாவுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றராம் மஹிந்த ராஜபக்ஷ

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பளை நகர சபையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தகவலுக்கு மேல் தகவல் வந்துகொண்டிருந்தது.

2000 மில்லியன் பணம் தருகிறேன், கொழும்பில் வசிப்பதற்கும் காணி தருகிறேன், ஜெனரால் அதிகாரத்தை மீண்டும் தருகிறேன், பாதுகாப்பு வழங்குகின்றேன், மனைவிக்கும் வேலை பெற்றுக்கொடுக்கிறேன், பிள்ளைகளுக்கும் அவசியமானதை செய்து தருகிறேன் என தகவல் வந்துகொண்டே இருந்தது. 

ஆனால் அதனை நான் பெற்றுக்கொள்ளவில்லை.
நாட்டை பற்றியே சிந்தித் காரணத்தினால் நாங்கள் யாரிடமும் மண்டியிடவில்லை. சிறையில் இருந்தாலும் மண்டியிடவில்லை. ஆனால் இன்று ராஜபக்ச மண்டியிட்டுள்ளார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments