Ticker

6/recent/ticker-posts

வீடியோ - ஏ.ஆர் ரஹ்மானின் மகன் பாடும் பரவசமூட்டும் கஸீதா !

டைரக்டர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் எடுக்கபட்டு வரும் படம் ஒகே கண்மணி. இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.  இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடபட்டன. இந்த படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது.இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் 

இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் மகன் அமீன் ஒரு பாடல் பாடி உள்ளார். இந்த பாடல் அரபி பாடலாகும் இந்த பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று உள்ளது. அமீன் தன் மாசு மருவற்ற குரலில் மவ்லாய ஸல்லி வஸல்லிம் என்ற பாடலை பாடியுள்ளாா். பாரம்பரிய அரபு மொழிப் பாடலை அதே மெட்டை வைத்து தன் இசையமைப்பில் தந்திருக்கிறார் ரஹ்மான்.  இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.. இதை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீனுக்கு ஏராளமான பாராட்டுகள் குவிகின்றன.

Post a Comment

0 Comments