முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மே தினக் கூட்டத்தை தாம் பகிஷ்கரிக்கப் போவதாக தென் மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மே தினக் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை ஒரே மேடையில் இணைக்கும் முயற்சியில் கட்சி செயற்பட்டு வருகிறது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து அந்த முயற்சி தோல்வியுற்றுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கான உத்தியோகப்பூர்வ அழைப்பு நேற்று விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, தென் மாகாண சபை உறுப்பினர்களை நேற்று (வியாழக்கிழமை) நாராஹென்பிட அபயராமவில் வைத்து சந்தித்தார். அதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மே தினக் கூட்டத்தை தாம் பகிஷ்கரிக்கப் போவதாக தென் மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments