Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் செயலாளா் லலித் வீரதுங்க கைதாவாா்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளரான லலித் வீரதுங்க இவ்வாரம் கைது செய்யப்படலாமென லங்கா சீ நியூஸ் என்ற சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
 தொலைத் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட இவர் ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 600 மில்லியன் ரூபாவை தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசாரங்களுடன் தொடர்புபட்ட பணிகளுக்கு வழங்கியமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படலாமென்றும் அந்த இணையம் கூறுகிறது.
 இதேவேளை,தொலைத் தொடர்புகள் சீராக்கல்  ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட அனுஷ பெல்பிட்டவும் கைது செய்யப்படலாமென்றும் அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments