Ticker

6/recent/ticker-posts

தேசியக் கொடியை சிதைத்தது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். அவர்களை உடன் கைது செய்யுமாறு முஜீபுர் ரஹ்மான் பொலிஸில் முறைப்பாடு!


அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரிகக்க் கூடாதென கோரி இலஞ்ந ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்னால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கையின் தேசியக் கொடியின் சிறுபான்மை சமூகங்களைக் குறிக்கும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய கொடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமந்திருந்தனர்.

தேசியக் கொடியை மாற்றுவது சட்டப்படி குற்றமாகும். இந்த செயலை முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற அங்கத்தவர்கள் சுமந்திருந்ததன் மூலம் பாரிய குற்றங்களை அவர்கள் இழைத்திருப்பதாகவும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கொழும்பு கறுவாத்தோட்ட காவல் நிலையத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் முறைப்பாடு செய்துள்ளார்.
 






Post a Comment

0 Comments