Ticker

6/recent/ticker-posts

கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு: சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சல்மான் கானுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் சல்மான் கான் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே கார் ஓட்டியதாக தெரிவித்த நீதிபதி, கார் ஓட்டும் போது அவர் மது அருந்தி இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சல்மான் கான் குற்றவாளி என கூறும் போது முந்தைய வழக்குகள் சிலவற்றையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.

இதனிடையே சல்மான் கான் தனது கருத்தை தெரிவிக்க நீதிபதி வாய்ப்பளித்தார். அப்போது, தான் காரை ஓட்டவில்லை என்ற தனது வாதத்தை சல்மான் மீண்டும் ஒரு முறை முன்வைத்தார். அதனைத்தொடர்நது சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments