முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்ஷ மகிந்த ஆட்சிக்காலத்தில் தனது அமைச்சின் கீழ் இயங்கும் திவிநெகும நிதியத்தின் பாரிய பணத்தொகை ராஜபக்ச சார்பில் நடாத்திச்செல்லப்பட்ட ரிவிர பத்திரிகைக்கு அமைச்சரவை அனுமதியின்றி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் ராஜபக்ஷவின் நண்பர் ரவி விஜேவர்த்தனவும் ரிவிர பத்திரிகைக்கு மாதந்தம் சம்பளப் பணம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் மஹிந்தவின் வேண்டுகோள்படி சில அரச நிறுவனங்கள் ரிவிர பத்திரிகையில் விளம்பரம் போட்டுள்ளனர். ராஜபக்ஷவினர் அரசாங்க பணத்தை ரிவிர பத்திரிகை ஊடாக தங்கள் பைகளில் நிரப்பிக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்விடயம் ரிவிர பத்திரிகை பிரதம ஆசிரியர் சிசிர பரனதந்திரி மற்றும் முகாமையாளர் மஹிந்த விஜேசுந்தர ஆகியோருக்கு தெரிந்தே மேலிட உத்தரவுபடி நடந்துள்ளது. ராஜபக்ச சார்பு ரிவிர பத்திரிகை உரிமையாளர்களான கேணல் பிரியந்த விக்ரமசூரிய மற்றும் திலங்க ராஜபக்ஷ ஆகியோர் விசாரணைகளுக்கு பயந்து வௌிநாட்டில் தங்கியுள்ளனர்.
பணப்பரிமாற்றங்கள் மர்மமான முறையில் இடம்பெற்றுள்ளமை குறித்து பொலிஸ் நிதி குற்றப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments