Ticker

6/recent/ticker-posts

மஸ்ஜித் பரிபாலனத்தில் ஆலோசனை (மஷூரா) சபையின் முக்கியத்துவம்


ஒலுவில் எம். எல். பைசால் - காஸ்பி-

சுஜூத் (சிரம்பணிதல்) என்ற வினை அடியில் இருந்து பிறந்த “மஸ்ஜித்” என்ற சொல் அல்லாஹ்வை சிரம் பணியும் இடம் என்ற பொருளைத் தருகின்றது. இஸ்லாமியர்கள் தங்களது மார்க கிரிகைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப் படும் இடமே மஸ்ஜித். இது முஸ்லிமின் வாழ்வின் சகல நிலைமைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இவ்வுலகில் உள்ள இல்லங்களில் சிறந்தது அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித் என்பதாலும் உலகில் அவனின் பெயர் கொண்டு அழைக்கப்படும் இடம் என்றவகையிலும்  ஒவ்வொரு இஸ்லாமியனும் அதனை  கௌரவிக்கிறான். அமைப்பில் சிறியதோ, பெரியதோ எவ்வாறு இருந்த பொழுதிலும் அது அல்லாஹ்வ்வை துதி செய்கின்ற,அமைதி, உள திருப்தியினை பெற்றுத் தருகின்ற இடமாக இருப்பதால் இஸ்லாமியார்களின் உள்ளத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுள்ளது...
“”நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்குரியது நீங்கள் அல்லாஹ் உடன் யாரையும் அழைக்க வேண்டாம்”” என்ற அல்லாஹ்வின் வாக்கு மஸ்ஜிதுகளின் சிறப்பை தெளிவுபடுத்துகிறது. 

மஸ்ஜித் நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் தொழுகைக்கு மாத்திரம் பயன்படுத்தப்படாது முஸ்லிம்களின் சகல விவகாரங்களையும் கவனிகின்ற ஒரு கேந்திர ஸ்தலமாக திகழ்ந்து வருகின்றது.
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களது செயற்பாடுகளை மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டே முன்னெடுத்துள்ளனர்
அவர்களது ஆட்சியில் மஸ்ஜிதுகள், கல்வி கூடமாக, நூல் நிலையமாக, நீதி மன்றமாக,ஆலோசானை கூடமாக, திகழ்ந்துள்ளன.
இந்த வகையில் பல பிரபல்யம்மிக்க மஸ்ஜிதுகள் அதன் பணியினை சிறப்பாக செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.....
இன்று மஸ்ஜிதுகள் இஸ்லாமிய நாடுகளில் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு அதற்கான விசேட ஏற்பாடுகளுடன் கவனிக்கப்படுகின்றன. சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய நாடுகளை போன்று இல்லா விட்டாலும் அரசின் சில நிருவாக வரையறைகளுடன் அவை இயங்குகின்றன.
இலங்கையில் வக்பு சட்டதின் கீழ் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைகளத்தின் நிருவாக வழிகாட்டல்களுடன் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றன..
மஸ்ஜிதுகளின் நிருவாக தெரிவுகள் பற்றிய அறிமுகம்
பெரும்பாலான மஸ்ஜிதுகள் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்  பதிவு செயப்பட்டு அற்கு ஏற்ப தெரிவுகள் இடம் பெறுகின்றன.
தெரிவுகளின் விபரம்
01. குடி முறை மூலமான நிருவாகத் தெரிவு: பொதுக் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு குடியும் தனது பிரதிநிதியினை தெரிவு செய்து கொள்ளும்.தெரிவு செயப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் பதவி தாங்குனர்களை தெரிவு செய்வர்.
இதனை மரைகாயர் சபை என்றும்,நிருவாக (நம்பிக்கையாளர்சபை  (ட்ரெஸ்டீ))  சபை என்றும் அழைக்கப்படும்
இம்முறை பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது

02. குடி முறையான மரைகாயார் சபை, மஸ்ஜித் நிருவாகசபை நம்பிக்கையாளர்சபை  (ட்ரெஸ்டீ) என சில கிராமங்கள் வெவ்வேறாக நிருவாக ஒழுங்குகளை கொண்டுள்ளன.
இம்முறை கிழக்கிலும் மற்றும் நாட்டின் குறிப்பிட்ட சில பிரதேசங்களிலும் காணப்படுகின்றது...

03. ஜமாஅத்தினர்கள் ஒன்று சேர்ந்து பொதுவான அடிப்படையில் பொருத்தம் என்று காணும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் முறை.
இத்தேர்வில் நேரடியாக பதவிகள் குறிப்பிடப்பட்டு உறுப்பினர்களின் தெரிவு இடம் பெறுகின்றன. இச்சபை நம்பிக்கையாளர்சபை  (ட்ரெஸ்டீ) என அழைக்கப்படும்..
இது அதிகமான பிரதேசங்களில் பின்பற்றப் படுகின்றது..

04.நிறுவனங்களின் தலைமையின் கீழ் நிருவாக அமைப்பும் காணப்படுகின்றது. நிறுவனத்தின் நிருவாகமே மஸ்ஜித் நிருவாகமாகக் கொள்ளப்படும்...

05குறிப்பிட்ட உறுப்பினர்களைக் கொண்ட டிரஸ்ட் நிருவாக முறை. அதில் அங்கம் பெறும் உறுப்பினர்களைக் கொண்ட (ட்ரெஸ்டீ) நிருவாகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருக்கும்..
இம்முறையின் கீழ் சில மஸ்ஜிதுகளே உள்ளன....

06     அரசியல் வாதிகளால் தமது கிராமதிலுள்ள அல்லது பிரதேசத்தில் உள்ள மஸ்ஜிதுகளுக்கு தான் விரும்பும் பிரமுகர்களை முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்  பதிவுக்குட்படுத்தி நியமன அடிப்படையில் நிருவாகமாகக் கொள்ளும் முறை.

இது தற்காலிக ஏற்பாடாகக் கொள்ளப்பட்டாலும் சில கிராமங்களில் நீண்ட காலமாகத் தொடர்வதை அவதானிக்கலாம்.....
மேலே சொல்லப்பட தெரிவுகளில் எவ்வகையான தெரிவாக இருந்த பொழுதிலும் மாறி மாறி சகல பிரதேசங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒரு பிரிவினர் தெரிவுக்குட்ப் படுத்தப் படுகின்றனர்.
மஸ்ஜித் நிருவாத்தின் பொறுப்புகளில் கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், மார்க்கம் படித்தவர்கள் உள்வாங்கப்டுவது அல்லது அவர்கள் முன்வருவது ஒப்பீட்டளவில் குறைவே....
பள்ளிவாசால்கள் (மஸ்ஜித்) கிராமத்தின் முக்கிய விடயங்களில் தனது கவத்தினை செலுத்தி , மார்க விவகாரங்களுடன் நின்று விடாது, கிராமத்தின் கல்வி, கலாசார விழுமியங்களை மேம்படுத்தும் செயற்திட்டகங்களில் தனது பங்களிப்புகளை வழங்கி, அதன் அபிவிருத்தி, பாதுகாப்பு, இனங்களுக்கிடைலான புரிந்துணர்வுத் திட்டங்கள் போன்றன மக்களுக்கு விளக்கி முன்னெடுக்கவேண்டிய கடப்பாடும் பள்ளி நிருவாகங்களுக்கு இருகின்றது.
பல் வேறு நிறுவனங்கள் பள்ளிவாசல் நிருவாகத்தினை பல விடயங்களுக்காக நாடி வருவதையும். அதன் ஆலோசனையினை கிராமம் தொடர்பாக வேண்டி நிற்பதையும் இன்று அதிகாமகவே அவதானிக்கலாம்..

முக்கிய கருமங்களில் ஒரு கிராமத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தி வாய்ந்த, பெறுமாணம் உள்ள சபையாக பள்ளிவாசல் நிருவாகம் இருப்பதனால் அதில் பல துறைசார்ந்தவர்களும் அங்கத்துவம் பெறுவது சிறப்பாகக் கொள்ளப் படுகின்றது

பள்ளிவாசல் நிருவாகத் தெரிவின்போது ஏற்படுகின்ற சில வேண்டத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்குடன் அதில் பங்குபற்றுவதற்கு துறைசார்ந்தவர்கள் விருப்பமின்மையினை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் நிருவாகத்துடன் ஒன்றித்த ஆலோசனை சபையின் அவசியம் உணரப்படுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் காலம் முதல் ஆலோசிக்கும் செயற்பாடு நடைமுறையில் இருந்ததை வரலாற்றில் அறிய முடிகின்றது...
நபியவர்கள் யுத்தகாலங்களின் போதும் முக்கிய நிகழ்வுகளின் போதும் மூத்த சகபாக்களிடம் ஆலோசனை பெற்றுள்ளார்கள்.
கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் சிரேஸ்ட சகாபாக்களை தான் ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காக
மக்கா,மதீனா சார்ந்த பகுதிகளை விட்டும் தனது அனுமதியின்றி வெளியில் செல்லக் கூடாது என்று கட்டளை பிறப்பித்து இருந்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள் மஜ்லிஸ் சூரா (ஆலோசனைசபை) 
என்ற அமைப்பினை நிறுவி தனது செயற்பாடுகளில் ஆலோசனை பெற்று “சூரா” அமைப்பினை தனியான பிரிவாக வளர்த்து இருக்கின்றார்ள்.
உலகில் உள்ள ஆட்சியாளர்கள் தனது ஆட்சியினை சிறப்பாக மேற்கொள்ள துறைசார்ந்தவர்களை நியமித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதை அவதானிக்கலாம்.

அல்லாஹ் கலந்து ஆலோசிப்பது பற்றி பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் தெளிவு படுத்துகின்றான்...
“”அன்றியும் தம் காரியங்களில் தம்மிடயே கலந்து ஆலோசித்துக் கொள்வார்கள்””   ( சூரா :38)
முக்கிய விடயதானங்களில் உரியவர்களை கலந்து ஆலோசித்து முடிவினை முன்னெடுப்பது முஸ்லிமின் பன்பு என்றே குர்ஆன் தெளிவு படுத்துகின்றது.

எம் நாட்டு முஸ்லிங்களின் விவகாரங்களுடன் தொடர்புபட்டிருக்கும் மஸ்ஜித் நிருவாகங்களுக்கு ஆலோசனை சபை ஒன்று கிராமங்களில் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய குறயாகவே சுட்டிக்காட்டப் படுகின்றது
மஸ்ஜித் நிருவாகங்கள் துறை சார்ந்தவர்களுடன் உரிய விடயத்துக்காக கலந்துரையாடி முடிவுக்கு வரும் போது அது சிறந்த பயனுள்ள பலா பலன்களைப் பெற்றுத்தரும்... துறை சார்ந்தவர்களைக் கொண்ட திட்டமிட்ட சபை இருக்கும் போதே சத்தியப்படுத்த முடியும்.

எமது கிராமங்கள் அங்குள்ள பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தின் பரிபாலனதில் கீழ் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமதினதும் பெரிய பள்ளிவாசல் நிருவாகம் சிந்தித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதுதான் கிராமத்தின் உத்தியோகபூர்வமான தீர்மானமாக இருக்கும்.
சில பிரதேசங்களில் பள்ளிவாசல் நிருவாகங்கள் மாவட்ட, பிரதேச சம்மேளனங்களாக இயங்குவதை காணலாம்.. .அவர்கள் துறை சார்ந்தவர்களை முடிந்தளவு உட்படுத்தி மாவட்டத்துடன் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். சில நிருவாகங்கள் பள்ளிவாசல்களில் நூல் நிலயங்கள், குர்ஆன் மனன பிரிவு போன்ற நல்ல திட்டங்களை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராமமும் தனது பகுதியில் உள்ள சகல துறையினர்களையும் உள்ளடக்கிய “”மசூரா”” சபை ஒன்றினை ஏற்படுத்தி கிராமங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பத்ற்கான வாய்பினை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்,
அவ்வாறான சபை ஒன்றினை அமைக்க முற்படும் போது நிருவாகத்தில் உள்ளவர்கள் தன்னை விட வேறு ஒரு சபை அமைவதனால் தனக்கான மதிப்பு இழக்கப்படும் என்ற பயமும், தயக்கமும் இருப்பதை கிராமங்களில் காணலாம்,,
சில கிராமங்களில் அரசியல் வாதிகளின் தலையீடு இருப்பதனால் பள்ளி நிருவாகத்தினை சீராக மேற்கொள்ள முடியாமல் இருப்பதையும் இவ்வாறான சிந்தனைகள் முன்வைக்கப்படும் போது அதனை கவனத்தில் கொள்ளாத தன்மையினையும் அவதானிக்கலாம்...
சகல தரப்பாரையும் இணைத்து அமைக்கும் ஆலோசனை சபை பள்ளி நிருவாகத்தினர்களுக்கு மிக உதவியாக அமையும் என்பதை உரியவர்கள் உணர வேண்டும்,...
அரசியல் வாதிகள் பொது மக்களின் தெரிவுகளுக்கு ஏற்பாடு செய்வதுடன் கிராமத்தின் நன்மை கருதி நல்ல திட்டங்களை நடைமுறைப் படுத்த முன்வருதல் அவசியமாகும்...

கிராமங்களில் உள்ள பள்ளி நிருவாகம் தனது கிராமத்தினை மையமாகக் கொண்ட ஆலோசனை சபையினை ஏற்படுத்தும் பட்சத்தில் பல செயற்பாடுகளை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தலாம் இன்சா அல்லாஹ்....
உரியவர்கள் இதற்கான நடவடிக்கையினை எடுப்பது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும்......









Post a Comment

0 Comments