சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தில் அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்றபூகம்பம் தொடர்பான உரையாடல் நிகழ்வில் பேராசிரியர் இரா.சிவசந்திரன் ஆற்றிய விளக்க உரை
2015 ஏப்ரல் 25 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால் 7000 இற்கும் மேற்பட்டோர் பலியானதுடன் பெரும்சொத்து இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எம்மைச் சூழவுள்ள மக்களும் இது போன்ற அனர்த்தம் ஏற்படுமா? என்று அஞ்சித் தவிக்கின்றார்கள். இவை பற்றி விஞ்ஞான விளக்கத்தை -7பூகம்பம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதாக இவ் உரைஅமைகின்றது.
ஆதிகாலச் சிந்தனைகள்
பூகம்பம் எரிமலைக் கக்குகைபோன்ற இயற்கையின் கொந்தளிப்புக்களைக் கண்ட பழையகால மக்கள் உலகிலேபாவங்கள் அதிகரிக்கும் போதுபுவியன்னைதன் கோபக் குமுறலை இவ்வாறுவெளிப்படுத்துகிறாள் என்றுகருதினர். சிலபிரதேசமக்கள் எமதுகாலின் கீழேபாவிகள் வாழும் பாதாள நரகத்திலிருந்து இவை தோன்றுகின்றன எனஎண்ணினார்கள். பழைய காலத்து யப்பானிய மக்கள் தமதுதீவில் அடிக்கடி இடம்பெறும் புவி நடுக்கங்களுக்கு புவியைத் தாங்கி நிற்கின்ற பெரிய சிலந்தியின் அசைவே காரணமெனக் கருதிவந்தார்கள்.
கிரேக்க அறிஞரும் தத்துவஞானியுமான பைதகரஸ் கூட புவிநடுக்கத்திற்குக் காரணம் இறந்தவர்கள் தம்முள் சண்டையிடுவதேஎன்று கூறியுள்ளார். கிரேக்கஅறிஞர் அரிஸ்டோட்டல் என்பவரே இந்நிகழ்வுகளுக்கு முதன் முதலாக ஓரளவுக்குஅறிவியல் ரீதியான விளக்கத்தை அளிக்க முயன்றார். புவிஉள்ளீட்டில் இருந்து வெப்பக் காற்றுத் திணிவுகள் வெளிவர முயல்வதே புவி நடுக்கங்களுக்குக் காரணமென இவர் விளக்கமளித்தார். ஆனால் இன்றைய நவீனஅறிவியல் வளர்ச்சி காரணமாகப் புவிநடுக்கங்கள் பற்றியநம்பகரமானதகவல்களையும் இந்நிகழ்வினை முன்னுணர்ந்து பாதுகாப்பைத் தேடிக் கொள்ளத்தக்க அறிவினையும் நாம் பெற்றுள்ளோம்.
புவியின் உட்பாகம்
மேற் பரப்பிலிருந்து மையப் பகுதி வரை ஏறத்தாழ 6400 கிலோமீற்றர் ஆழத்தைக் கொண்ட பூமி புவிமேலோடு (உசரளவ)இ இடையோடுஅல்லது மூடுபாறை (அயவெடந)இகோளவகம் அல்லதுஉள்ளீடு(உழசந) எனும் மூன்றுபகுதிகளைக் கொண்டுள்ளது. புவிமேலோட்டில் சராசரிஆழம் 10-50 கிலோமீற்றர் ஆகும். அதன் பின் 2900 கிலோமீற்றர் ஆழம் வரை மூடுபாறைஅமைந்துள்ளது.
அதன் பின் தொடரும் உள்ளீட்டுப் பகுதியை வெளிஉள்ளீடு, உள் உள்ளீடுஎன இரண்டாகவகுப்பர். 2900 கிலோமீற்றர் முதல் 5150 கிலோமீற்றர் வரைவெளிஉள்ளீட்டுப் பகுதியும் அதற்கப்பால் புவிமையம் வரைஉள் உள்ளீட்டுப்பகுதியும் அமைந்துள்ளன. புவியின் உள்ளேசெல்லச் செல்ல வெப்பநிலையானது ஒருகிலோமீற்றருக்கு 300ஊ என்றவகையில் அதிகரித்துச் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மையப் பகுதிவரை ஒரே சீராக வெப்பநிலை அதிகரிப்பதில்லை என்றும், மையப்பகுதியில் 60000ஊ- 10,0000ஊ வெப்பநிலையே நிலவுவதாகவும் கணித்துள்ளனர்.
புவியின் உள்ளே காணப்படுகின்ற மிகுந்த வெப்பமானது உள்ளேகிளர் மின் வீச்சுக்களைத் தோற்றுவிப்பதால் வெப்ப மேற்காவுகை ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் உட்பகுதியில் ஏற்பட்டுவரும் இயக்கங்களால் புவிமேலோட்டுப் பகுதியில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இவை குத்தான அல்லது கிடையான அசைவுகளைப் புவிமேலோட்டுப் பகுதியில் ஏற்படுகின்றன. இவ்வசைவுகள் புவி மேலோட்டுப் பாறைப் பகுதிகளைச் சடுதியாக நிலை குலைக்கின்றன. இவ்வாறு நிலைகுலையும் போது தோன்றும் பாரிய அதிர்ச்சி அலைகள் நிலை குலைவு மையத்திலிருந்து அதிர்ச்சி அலைகளாகப் பரவி புவியோட்டுப் பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்ச்சி அலைத்தாக்கமே பூகம்பம் அல்லது புவிநடுக்கம் எனப்படுகின்றது.
கணநேரம்,கதிகலங்கச் செய்யும்
சிலவினாடிமுதல் சிலநிமிடநேரம் வரைநீடிக்கும் புவி நடுக்கமானது நிலத்தில் பிளவுகளை நிலச்சரிவுகளை, புவிமடிப்புகளை எரிமலைக் கக்குகளை ஏற்படுத்தி விடுகின்றது. சமுத்திரப் பகுதிகளில் ஏற்படும் இவ்வாறான புவி நடுக்க நடவடிக்கைகள் சமுத்திரத்திலே பாரிய அலைகளை உருவாக்கிவிடும். 15 மீற்றருக்கு உயர்ந்தெழும் அலைகள் 700-800 கிலோமீற்றர் வேகத்தில் கரைகளை நோக்கி வந்து பாரிய சேதங்களை விளைவித்து விடுகின்றன. இதனையே ‘சுனாமி’ என்கின்றோம்.
புவிநடுக்கத்தால் ஏற்பட்டநிலச்சரிவு,கட்டடங்களின் சிதைவு, கடல் கொந்தளிப்புஎன்பவற்றால் நாம் அறிந்தவரலாற்றுக் காலம் முதல் இன்றுவரை 80 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். 1556 இல் சீனாவின் செஞ்சிபகுதியில் புவி நடுக்கத்தால் 830,000 மக்களும், 1727 கல்கத்தாவில் 300,000 மக்களும், 1920 இல் பேருவில் 67,000 மக்களும், 1974 இல் வடபாகிஸ்தானில் 500 மக்களும், 1976 இல் கௌதமாலாவில் 50,000 மக்களும், 1985 இல் மெக்சிக்கோவில் 25,000 மக்களும், புவி நடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர். 1993 செப்ரம்பர் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் இந்தியாவின் மகாரஷ்ரா மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் 35,000 க்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்டுள்ளது. மக்கள் உயிர் மாத்திரமன்று புவிநடுக்கம் நிகழ்ந்த பகுதிகளில் பலநகரங்களே அழிவுற்றுள்ளன. பர்மாவில் புவிநடுக்க மென்றால் அங்கே பரந்திருந்த வரலாற்றுப் பெருமை மிக்க கோவில்களில் 50 வீதம் அழிவுபட்டுள்ளன.
புவி நடுக்கங்களில் அதிகமானவை புவி மேற் பரப்பிலிருந்து 10-15 கிலோமீற்றர் ஆழத்தில் தோன்றினாலும் இதற்குக் கீழே தோன்றுவதாக ஆய்வுகளிலிருந்து அறிய முடிகின்றது. இந்த ஆழத்தையும் ஏற்படும் காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு புவியசைவுப் புவி நடுக்கங்கள், எரிமலைப் புவி நடுக்கங்கள், பாதாளப் புவிநடுக்கங்கள் என இவை மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் புவியசைவுப் புவி நடுக்கங்கள் ஏற்படும் போது எரிமலைக் கக்குகை நிகழ்ந்தால் அல்லது எரிமலைக்கக் குகைகளால் புவி நடுக்கங்கள் ஏற்பட்டால் அவைஎரிமலைப் புவி நடுக்கங்கள் எனஅழைக்கப்படும். பாதாளப் புவி நடுக்கங்கள் மிகமிக ஆழத்தில் நிகழ்வதால் அவைபுவியோட்டில் அதிகபாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
பொதுவாக அண்மைய மலையாக்க செய்முறைகளும் எரிமலை உயிர்ப்புகளும் அதிகமாகஏற்படும் பகுதிகளிலேயே புவிநடுக்கங்கள் அதிகமாகவும் வலுவுடன் கூடியதாகவும் நிகழ்கின்றன. புவியில் இவ்வாறான பகுதிகள் மூன்று வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
1. வட,தென் அமெரிக்கறொக்கீஸ் அந்தீஸ் மலைத்தொடர்
2. நியூசிலாந்து,பிஜித்தீவுகள்,கிழக்கிந்தியதீவுகள் யப்பான் தீவுகள் என்பவற்றைஉள்ளடக்கும் பசுபிக் சமுத்திரத்தைச் சுற்றியுள்ளகரையோரவலயம்
2. நியூசிலாந்து,பிஜித்தீவுகள்,கிழக்கிந்தியதீவுகள் யப்பான் தீவுகள் என்பவற்றைஉள்ளடக்கும் பசுபிக் சமுத்திரத்தைச் சுற்றியுள்ளகரையோரவலயம்
3. அசோக் தீவுகளில் தொடங்கிஅலப்ஸ் மலைத்தொடர் ஊடாக சீனாவரை சென்றுபின் தெற்காகபரிமா, தென்கீழ் ஆசியப் பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கும் மத்திய தரைகடல் வலயம் அத்துடன் – அத்திலாந்திச் சமுத்திரத்தினுள் அமைந்துள்ள மத்திய அத்திலாந்திச் சமுத்திர மலைத்தொடர்
ஆகிய மூன்று வலயங்களிலுமே பெருமளவில் புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
ஆகிய மூன்று வலயங்களிலுமே பெருமளவில் புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக இவ்வலயங்கள் புவிமேலோட்டின் பலவீனமானதும் தடிப்புக்குறைந்தபகுதிகளாகவும் விளங்குகின்றன. மேலும் கண்ட நகர்வினை விளக்கும் அண்மைக் காலத் தகட்டோட்டுக் கொள்கைபுவிநடுக்கவலயம் பற்றிய விளக்கத்தையும் தருகின்றது. புவியின் உள்ளே நிகழும் வெப்பமேற்காவுகை ஓட்ட நிகழ்விலே,ஓட்டம் ஒருங்கும் பகுதிகள் மலையாக்க அசைவுகள் தொழிற்படும் பகுதிகளாகவும் ஓட்டம் பிரியும் பகுதிகள் நீள் பள்ளத்தாக்குப் பகுதிகளாகவும் விளங்குகின்றன. புவி மேலோடானாது கண்டங்களையும் சமுத்திரங்களையும் கொண்ட சிலதகடுகளாக அமைந்துள்ளது.
மேற்காவுகை வெப்ப ஓட்டத்தால் இத் தகடுகள் ஒருங்குதலும் பிரிதலும் ஏற்படுகின்றன. இவ்வாறு தகடுகளின் எல்லைகள் அல்லது இரு தகடுகள் இணையும் பகுதிகள் புவி மேலோட்டின் நொய்தலான பகுதிகளாக அமைந்துள்ளன. இவையே எரிமலை, மலையாக்க புவி நடுக்க வலயங்களாக காணப்படுகின்றன.
தென்னிந்தியா, இலங்கை பாதுகாப்பான பிரதேசங்கள்
புவி நடுக்க வலயங்களுக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் புவிநடுக்க அதிர்வுகள் சிலவேளைகளில் உணரப்பட்டாலும் அவற்றால் பாதிப்புகள், சேதங்கள் ஏற்படுவது அரிது. இலங்கையினதும் தென் இந்தியதக்கண பீடபூமியினதும் அடிப்பாறை வன்மையான தொல் காலப் பாறையாக விளங்குவதால் புவி நடுக்கங்கள் இப்பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மேலும் இப்பகுதிகள் எரிமலை வலயங்களுக்கு அப்பால் அமைந்துள்ளன. அத்துடன் இந்தோ- அவுஸ்திரேலியத் தகட்டின் மத்தியில் இவை அமைந்துள்ளமையால் புவி நடுக்கத்திலிருந்து இலங்கையையும், தென் இந்தியத் தக்கணப் பிரதேசமும் காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இன்றைய நவீன விண்வெளியுக் மனிதனால் பூகம்பத்தை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது புவிநடுக்கம் வரப் போகிற தென்பதைமுன் உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற் கொண்டு மனித உயிர்களையும் பொருட் சேதத்தையும் தவிர்த்துக் கொள்ளமுடியுமா? இன்றைய விஞ்ஞான அறிவு இரண்டாவது கேள்விக்கான பதிலையே சாத்தியமாக்கியுள்ளது.
புவிநடுக்கம் உலகில் எங்கேயாவது ஓரிடத்தில் சிறுஅதிர்வாகவோபெரும் நடுக்கமாகவோதினம் தினம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஒருவருடத்தில் 10 இலட்சம் தடவைகள் புவிநடுக்கம் ஏற்படுவதாகக் கணிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை புவியோட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சில புவி நடுக்கங்களே கடுமையான வையாகத் தோன்றுகின்றன. இன்று உலகில் எல்லா நாடுகளிலுமே புவிநடுக்க அதிர் அலைகளைப் பதிவுசெய்யும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புவி நடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புவி நடுக்கப் பதிவு நிலையங்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு வினாடியும் தரவுகள் – தகவல்கள் பெறப்பட்டுவருகின்றன.
புவியின் உள்ளே ஏற்படுகின்ற இயற்கையான, அல்லது செயற்கையான நிலை குலைவுகளால் நில நடுக்கக் குவிமையத்திலிருந்து அதிர்வு அலைகள் புவியோடெங்கும் பரவுகின்றன. புவியதிர்வுப் பதிவுகருவிகளில் இந்தஅலைகள் பதியப்படுகின்றன. இதனைக் கொண்டு புவிநடுக்கம் எங்கே, எப்போது, எவ்வளவு தாக்கமாக நிகழப் போகின்றது என்பதைமுன் கூட்டியேஅறியக் கூடியதாக உள்ளது. யப்பான், சீனா, ரஷ்யா போன்றநாடுகள் இது தொடர்பான ஆய்வில் முன்னணி வகிக்கின்றன.
புவி நடுக்கத்தை விலங்குகளும் முன்னுணர்ந்து கொள்கின்றன. சீனாவில் நவீன விஞ்ஞான முறைபுவி நடுக்க ஆய்வுகளில் மாத்திரமல்ல, மரபுவழி முறைகளிலும் அவதானம் செலுத்துகின்றார்கள். சீன விஞ்ஞானிகள், மனிதனைவிட விலங்கினங்கள் புவி நடுக்கத்தை முன்னுணரத் தக்க திறனைப் பெற்றுள்ளன என நிரூபிக்கின்றார்கள். 1963 இல் சீனமிருகக் காட்சிச் சாலைஒன்றில் மேற் கொள்ளப்பட்ட அவதானிப்பு ஆய்வொன்றின் படிபு விநடுக்கம் ஏற்படுமுன் அன்னப்பறவை ஒன்று நீர்த்தடாகத்தை விட்டு வெளியே வந்து தவிப்பதையும், புலிக்குட்டிகள் நிலையாக நின்றதையும், திபெத்லாக் பறவை குழப்பமடைந்த நிலையில் காணப்பட்டதையும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இவ்வாறு புவிநடுக்கம் பற்றி முன்னுணர்தல் தொடர்பாக உலக விஞ்ஞானிகளின் செம்மையான வளர்ச்சி புவி நடுக்கத்தால் மக்களின் உயிர், உடைமைகள் அழிவதை எதிர்காலத்தில் பெரிதும் தடுக்க இயலுமாஎன்றஆய்விலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இயற்கையாகப் புவிநடுக்கம் ஏற்படும் போது செயற்கையான முறையில் எதிர் அதிர்வுகளை உருவாக்கி அதன் வேகத்தைக் குறைத்து சேதத்தை மட்டுப்படுத்த முடியுமாஎனவும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்கின்றார்கள். இது தொடர்பான ஆய்வுகள் விரைவில் மேலும் பல புதுமைகளைத் தோற்றுவிக்கலாம்.
இன்றைய நவீன விண்வெளியுக மனிதனால் பூகம்பத்தை தடுத்து நிறுத்தமுடியுமா? அல்லதுபுவிநடுக்கம் வரப் போகிறதென்பதை முன் உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மனித உயிர்களையும் பொருட் சேதத்தையும் தவிர்த்துக் கொள்ளமுடியுமா? இன்றைய விஞ்ஞான அறிவு இரண்டாவது கேள்விக்கான பதிலையே சாத்தியமாக்கியுள்ளது.
www.tamilfastnews.com

0 Comments