Ticker

6/recent/ticker-posts

உதயங்கவை கைதுசெய்ய இலங்கை பொலிஸார் உக்ரேன் பயணம்!

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும்,  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான உதயங்க வீரதுங்கவின் கைதுசெய்ய,  இலங்கையின் பொலிஸ் குழுவொன்று கடந்த வாரம் உக்ரேன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேன் பிரிவினைவாதிகளுக்கு உதயங்க வீரதுங்க ஆயுதம் வழங்கியதாக, உக்ரேன் பிரதமர் அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முறையிட்டிருந்தார்.
உதயங்கவை கைதுசெய்யும் நடவடிக்கையில் உக்ரேனும் உதவுவதாக தெரிவித்த நிலையில், இலங்கை பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

உதயங்கவின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய இலங்கை இளைஞனின் கொலை தொடர்பிலும்,  உதயங்க சந்தேகிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உதயங்கவை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது.   அதனையடுத்து,  அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் உதயங்க தொடர்பில் முறையிடப்பட்டிருந்தபோதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

Post a Comment

0 Comments