முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாலும் ஏனையவர்களாலும் நடத்தப்படவுள்ள பேரணிக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, இம்மாதம் 18 ஆம் திகதி குறித்த பேரணியை நடத்தக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் சே.கஜேந்திரனுக்கும் ஏனைய தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் கலந்துகொள்ளவுள்ள இந்தப் பேரணியை தடுத்து நிறுத்தாவிடின் சமாதானத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முல்லைத்தீவு நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த இடைக்கால தடையுத்தரவு இன்றிலிருந்து 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments