Ticker

6/recent/ticker-posts

தலசீமியாவுக்கான சிகிச்சை இலங்கையில் வெற்றி !

தலசீமியா நோயாளர்களைக் குணப்படுத்துவதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மரபணு மாற்று சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளது.
தலசீமியா நோய் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி என கருதப்படுகின்றது.
ஆயினும், மரபணு மாற்று சத்திரசிகிச்சையின் மூலம் இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு முடியுமென ஒருசில வருடங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர்.

இதற்காக நோயாளர்களின் மரபணு மற்றும் அவர்களின் சகோதரர்களின் மரபணுவுடன் பொருந்துவது அவசியமாகும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மரபணுக்கள் பொருந்தக்கூடியவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மரபணு மூலம் நோயாளருக்கு சத்திரசிகிச்சை மூலம் நோயைக் குணப்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மரபணு பொருந்தக்கூடிய ஐந்து தலசீமியா நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகள் வெற்றியளித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் காலிங்க நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இந்த சத்திரசிகிச்சையை எதிர்காலத்தில் இலவசமாக வைத்தியசாலைகளில் முன்னெடுப்பதற்கு எண்ணியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments