அமெரிக்க சிறுமிக்கு பாலியல் பாலத்காரம் செய்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மதபோதகரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ரேவ் ஜோசப் பழனிவேல் ஜெயபால்(60). இவர் அமெரிக்காவில் உள்ள மின்னிசோட்டா என்ற பகுதியில் மதபோதகராக இருந்து வந்துள்ளார்.
இவர் மீது 2005 -ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், சில்மிஷத்திலும் ஈடுபட்டார் என்று பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த ஜெயபால் இந்தியாவிற்கு தப்பித்து வந்து விட்டார்.
இதையடுத்து 2012-ம் ஆண்டு இந்திய காவல்துறையினரால் ஜெயபால் கைது செய்யப்பட்டார். இவர் தன் மீதான பாலியல் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் மதபோதகர் ஜெயபாலை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவருக்கான தண்டனை விவரங்கள் வரும் 15-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மதபோதகருக்கு குறைந்தபட்சம் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 25 வயது ஆகிறது.

0 Comments