சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்வத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோக சம்வங்கள் தொடர்பில் நீண்டகாலத்தின் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாணைக்குட்படுத்தப்படும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
குறிப்பாக சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களினூடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சிக்கல் நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் அக்கரையின்மையே சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு காரணம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆகவே சிறுவர்கள் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கோ அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments