பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய கடலோரக் காவல் படையின் சிறிய விமானம் திடீரென மாயமானது. அது, சிதம்பரம் கடல் பகுதியில் விழுந்திருக்கக் கூடும் என்று கருதப்படுவதால், அங்கு விமானத்தைத் தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து, பாக் ஜலசந்திக்கு ரோந்து சென்ற கடலோர காவல்படைக்கு சொந்தமான 'டார்னியர்' சி.ஜி. 791 விமானம், ரோந்துப்பணியை முடித்து விட்டு சென்னை திரும்பும் வழியில் மாயமானது.
இதில் பைலட் வித்யா சாகர் தலைமையில் 3 அதிகாரிகள் பயணித்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடந்த தேடுதல் வேட்டையில் விமானம் விழுந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 3வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

0 Comments