Ticker

6/recent/ticker-posts

மெகி நூடில்ஸ் விவகாரம் : அமிதாப் பச்சன் விளக்கம்

மெகி நூடில்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக பிரபல நடிகர் திரு. அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், மெகி நூடில்ஸ் குறித்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள போவதாக பாலிவுட் நடிகர் திரு அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.  மேகி நூடுல்ஸில் ஈயம் கலந்திருப்பதாக கூறி அதற்கு டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அதில் விளம்பர தூதர்களாக நடித்த திரு அமிதாபச்சன், செல்வி. பிரீத்தி ஜிந்தா, திருமதி. மாதுரி திட்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரு அமிதாப்பச்சன் 2 வருடங்களுக்கு முன்பே தான் மெகி விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார். தனக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என கூறியுள்ள திரு. அமிதாபச்சன், சட்டப்படி அதனை எதிர் கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments