இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுகாலத்துக்கான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஷ்டன் கார்டருக்கு டெல்லியில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஷ்டன் கார்டர் ( Ashton Carter ) சந்தித்து பேசினார்.
நேற்று, இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோர் பாரிக்கர் (Manohar Parrikar ), அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்டருக்கும் இடையே பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 90 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே 10 ஆண்டு காலத்துக்கான ராணுவ கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், மனோகர் பாரிக்கரும், ஆஷ்டன் கார்டரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணுவ உபகரணங்களை இரு நாடுகளும் கூட்டாக தயாரிக்கவும், உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments