Ticker

6/recent/ticker-posts

கனிமொழியுடன் பேசிய பின்னரே எழிலன் இராணுவத்திடம் சரணடைந்தார்: அனந்தி சசிதரன்

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தனது கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரே இராணுவத்திடம் சரணடைந்தார் என்று அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமற்போயுள்ள தனது கணவரும், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் நேற்று வியாழன்று சாட்சியமளித்த போதே வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
4tamilmedia.com

Post a Comment

0 Comments